சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ளஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத்தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாகசென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்தவிமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கைசந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில்அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து சுங்கஅதிகாரிகள் விசாரித்தனர். அவர் பதற்றம் அடைந்துமுன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர்கள் கொண்டு வந்த பைகளை பரிசோதித்த போது, அதில் 8 பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன. பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின் பவுடர்என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்தஇந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தைமதிப்பு ரூ.70 கோடி. இவைகள் போதைப் பொருள் மற்றும்சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை கடத்திவந்த இரு பெண்களிடம் நடத்தியவிசாரணையில், ஒருவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்துதில்லியில் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில்சிகிச்சை பெற வந்தார் என்றும், அவருக்கு உதவியாக தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் வசிக்கும் மற்றொருபெண்ணும் வந்தது தெரியவந்தது. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சென்னையில்இறங்கினர். இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும்விசாரணைகள் நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேசவிமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது Read More