விஜய் ஆண்டணி நடிக்கும் “ஹிட்லர்” திரைப்படம் செப்.27ல் வெளியீடு

செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல்  தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”.  வரும்  செப்டம்பர் 27  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப்பிறகு  நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். **********

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…  கௌதம் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முன்பு அவர் படத்தில், இசையமைக்க வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன், இந்தப்படத்தில் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. தனா மிகச்சிறந்த இயக்குநர் படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார். ரியா உங்களின் மன்மத லீலை பார்த்தேன், அந்தளவு இல்லை என்றாலும் இதில் ரொமான்ஸ் இருக்கிறது. வந்த சில படங்களில், நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவது, ஆச்சரியமாக இருக்கிறது. விவேக் மெர்வின் ரசிகன் நான், உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், விவேக் பிரசன்னா எல்லாம் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா பல தடைகளைக் கடந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார்.  இந்தப்படத்தில் நாங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை, எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஜாலியான, ஆக்சன் படமாக இப்படம் இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் தனா பேசியதாவது.., இந்தப்படம் ஒரு நல்ல ஆக்சன் படம்,   ஒரு பக்கம் விஜய் ஆண்டனி சார், இன்னொரு பக்கம் கௌதம் மேனன் சார் கொஞ்சம் தயக்கமாக இருந்தது,  ஆனால் அவர்கள் தந்த ஒத்துழைப்பில் தான், இந்தக்கதையைச் சிறப்பாகச் செய்தேன். ராஜா சார் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். நடிகர்கள் மற்றும் குழுவினர் முழு உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் கம்ர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும்.