செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மழைக்காலங்களில் ஏற்படும்நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த செங்கல்பட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. மழைக்காலமாக இருப்பதால் காய்ச்சல்பலருக்கு வருகிறது.
பொது சுகாதாரத்துறையினர் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். இவர்கள் களப்பணியில் ஈடுபடும்போது, தோழமைத் துறைகளை ஒருங்கிணைத்து செயல்படவேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, மாநகராட்சி மூலம் நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும்தற்காலிக கொசுப்புழுத் தடுப்பு பணியாளர்கள் (DBC), வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களை அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும். நல்ல நீரில் தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகுவதால் அந்தக்கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும். குளோரினேசன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கவும்நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த குடிநீரை அந்தந்தப் பகுதி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இப்பணியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும்பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்ய காலமுறைப்படி குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவேண்டும்.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்த ஊராட்சி, நகராட்சி மற்றும்மாநகராட்சி நிர்வாகங்கள் தேவைப்படும் DBC என்ற தற்காலிக நோய்த் தடுப்புப் பணியாளர்களை நியமித்துக்கொள்ளலாம்.
பொது இடங்களில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கப்புகள், தேவையற்ற டயர்கள், மழைநீர் தேங்கும்கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல்அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாகப் பெற்றோர்களுக்குத் தெரிவித்து, சிகிச்சை அளிக்கவும், மேலும்பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என அறிந்தும் அவர்கள் விவரங்களைஅருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தெரிவிக்கவும் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஊட்டச்சத்து மற்றும் சமூக நலத்துறையினர் அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்குஏதேனும் காய்ச்சல் இருப்பின், அந்தந்தப் பகுதி சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.
மருத்துவத் துறையைப் பொறுத்தமட்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேரும் காய்ச்சல் கண்டவர்கள் விவரம், சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தரப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான இடவசதி, மருந்து மாத்திரைகள்முன்னேற்பாடாக செய்து வைத்திடல் வேண்டும். தனியார் மருந்தகங்களில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது. இது தொடர்பாக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சித்தமருத்துவத்துறை, அனைத்து காய்ச்சல் கண்ட நபர்களுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரியம் மழைக்காலங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். மேல்நிலைத் தொட்டிக்கு வரும் குழாய்கள், தொட்டியிலிருந்து வெளியேறும் குழாய்கள், தெருக்களில் விநியோகிக்கப்படும் குழாய்களில் உடைப்புகள் இருப்பின் உடனே கண்டறிந்து சீர் செய்யப்படவேண்டும்.
மேற்கண்ட துறைகள் அனைத்தும், தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் மழைக்காலங்களில் ஏற்படும்தொற்று நோய்களுக்கான மருந்து நிலவேம்பு குடிநீரை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திருமதி.அழகுமீனா, இ.ஆ.ப., செங்கல்பட்டுசட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, மாநகராட்சி மேயர் திருமதி.வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர்திரு.காமராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் திருமதி.செம்பருத்தி துர்கேஷ், திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர்திரு.எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.உதயாகருணாகரன், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி.சங்கீதா பாரதிராஜன், இலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.சுப்புலட்சுமி பாபு, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் திருமதி.தமிழ்ச்செல்வி, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.கண்ணன், நந்திவரம்–கூடுவாஞ்சேரி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.கார்த்திக் தண்டபாணி, செங்கல்பட்டு நகராட்சி மன்ற தலைவர்திருமதி.தேன்மொழி நரேந்திரன், , மறைமலை நகராட்சி நகர்மன்ற தலைவர் திரு.ஜெ.சண்முகம், துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.பரணிதரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசுஅலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.