செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு...ராகுல் நாத், ..., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 84 பயனாளிகளுக்கு ரூ.19.62 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,

இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ.19.62 இலட்சம் மதிப்பீட்டில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது போன்ற மனுநீதி நாள் முகாம்கள் ஊராட்சிகளில் தொடர்ந்துநடைபெற உள்ளது. மனுநீதி நாள் முகாம்களில் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்பதால் கிராமமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதுடன், ஒவ்வொரு துறையின் மூலம் அரசுமக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் அரசின் திட்டங்களைஎளிதாக கொண்டு சேர்க்க முடியும்.

மேலும் இந்த முகாம்களில் துறை சார்ந்த விளக்க கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொருதுறையிலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விளக்ககண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது இந்த வாய்ப்பை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி அரசின்நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவித்தார்.

இன்றைய மனுநீதி நாள் முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக சமூக பாதுகாப்புதிட்டம் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை மற்றும்முதியோர் உதவித்தொகை, 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு விலையில்லாசலவை பெட்டிகள், கூட்டுறவு துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கடன் உதவிகள், பொது சுகாதாரம்மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மருத்துவபெட்டகங்கள், 8 பயனாளிகளுக்கு கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்கள், வேளாண்மைநலத்துறை நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு திரவ பாஸ்போபாக்டீரியா 500 மி.லி திரவஅசோஸ்பைரில்லம் நெல் 500 மி.லி, ஒரு பயனாளிக்கு உளுந்து விதை மானியம், ஒரு பயனாளிக்கு நெல்நுண்ணூட்டக் கலவை, ஒரு பயனாளிக்கு தென்னை நுண்ணூட்டக் கலவை, ஒரு பயனாளிக்கு பயிர்நுண்ணூட்டக் கலவை, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு சுயதொழில்தொடங்குவதற்கான கடனுதவிகள், தோட்டக்கலை துறையின் சார்பாக மாநில தோட்டக்கலை வளர்ச்சிதிட்டத்தில் 2 பயனாளிகளுக்கு பழச்செடி தொகுப்புகள், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகள் என மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.19.62 இலட்சம்மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு...ராகுல் நாத் ..., அவர்கள் மனு நீதி நாள்  முகாமில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சுபா நந்தினி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆனந்த் குமார் சிங், ..., தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செல்வகுமார், தனித்துணைஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி.சாகிதா பர்வின், சித்தாலப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்திரு.ரவி, தாம்பரம் வட்டாட்சியர் திருமதி.கவிதா, அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்பலர் பங்கேற்றனர்.