செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ...ராகுல் நாத், ..., தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி ...,  ஆய்வு மேற்கொண்டார்.*********

செங்கல்பட்டு  மாவட்டத்தில் வண்டலூர் வட்டம், முருகமங்கலத்தில் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், பரனூர்அரசு மறுவாழ்வு இல்லத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் பயிரிடப்பட்டுள்ள காய்கறி மற்றும் பழச்செடிவளர்ப்பு, மற்றும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில்   மாவட்ட ஆட்சித் தலைவர்திரு..ராகுல்நாத், ..., அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு  மாவட்ட கண்காணிப்பு  அலுவலர் / வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற   வளர்ச்சித்துறை அரசு செயலாளர் திரு.சமயமூர்த்தி ..., அவர்கள்    பல்வேறு துறைகளின் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள்  குறித்து  ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீடு வழங்கும்திட்டத்தின் கீழ் முருகமங்கலம் பகுதியில்  1260 (G+5, G+2) அடுக்குமாடி குடியிருப்புகள் 3.3 ஹெக்டர்பரப்பளவில் ரூ.151.94 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை பொருளாதாரத்தில் நலிவுற்றநகர்ப்புற ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்ய அடுக்குமாடி குடியிருப்புகளில் மொத்தகுடியிருப்புகளின் எண்ணிக்கை –1260. ஒவ்வொரு குடியிருப்பும் தோராயமாக 400 சதுர அடி பரப்பளவில் நல்லகாற்றோட்ட வசதியுடன் கூடிய வசிப்பறை, படுக்கையறை, சமையலறை ,குளியலறை, கழிவறை மற்றும்வராண்டா ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. எல்லா குடியிருப்புகளும் தண்ணீர் மற்றும்மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டப்பகுதியில் மின் தூக்கி – 17, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் –1, (STP, 0,6 MLD Extended Aeration Method), சமுதாய நலக்கூடம் – 1, ஆரம்ப சுகாதார நிலையம் – 1, தொடக்கப்பள்ளி – 1, நியாய விலைக்கடை -1, கடைகள் – 12, அங்கன்வாடி – 2, பால் அங்காடி– 2 மற்றும் காவல் சாவடி-1 ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்ட ப்பகுதியில்  மழைநீர்சேகரிப்பு அமைப்பு, கட்டிடங்களை சுற்றி பேவர் பிளாக் நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

 கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் உட்புற, வெளிப்புற பகுதிகளின் ட்ரோன் காட்சிகளை பேருந்துமுனையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில்  பார்வையிட்டார்.

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு  திட்டத்தின் 2022–2023 ஆண்டின் 1194 .மீ. பரப்பளவில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்  அறிவுசார் மைய கட்டிட பணிகளைஆய்வு மேற்கொண்டார்.

 பரனூர், அரசு மறுவாழ்வு இல்ல வளாகத்தில் தோட்டக்கலைமலைப்பயிர்கள் துறையின் சார்பில் பந்தல்காய்கறிகள், பழ மரங்கள், காய்கறி வகைகள், கீரை வகைகள், மருத்துவ தாவரங்கள் ரூ.56,000 செலவில்சொட்டு நீர் பாசன குழாய்கள் மூலம் விளைவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதையும்  மற்றும் வேளாண்கருவிகளையும் பார்வையிட்டார்

செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தில்  சுமார் 12 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு...ராகுல்நாத், ..., அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு செயலாளர்
திரு. சமயமூர்த்தி ..., அவர்கள்   அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

ஆய்வு கூட்டத்தில் துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் துறை வாரியாக ஆய்வுசெய்யப்பட்டதில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற துறைகளில் நடைபெற்று வரும் பணிகளைவிரைந்து முடித்திடவும், முடிவு பெற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக செயல்படுத்தவும்மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்திருமதி.சுபா நந்தினி, மாவட்ட வன அலுவலர் திரு.ரவி மீனா, ..., அரசு உயர் அலுவலர்கள் மற்றும்அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.