செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி, கோழியாளம் கிராமத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன்பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசன்அவர்களுக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்என்று அறிவித்ததற்கிணங்க, கோழியாளம் கிராமத்தில் 260 சதுர மீட்டர் பரப்பளவில்  இரட்டைமலைசீனிவாசன் நினைவு மண்டபம், 41.34 சதுர மீட்டர் பரப்பளவில் உயர் மேடை, மற்றும் 33.19 சதுர மீட்டர்பரப்பளவில் கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்நினைவிடத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதைஇன்றைய தினம் (17.11.2023) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி, கோழியாளம் கிராமத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் சுற்றுச்சுவர் மற்றும்அணுகுசாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு..செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு..சுந்தர் மற்றும் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பாபுஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு...ராகுல் நாத், ..., அவர்கள் தலைமையில்மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன்அவர்கள் இன்று (17.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.