செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவ கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில்  இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், இ.ஆ.ப, துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் 6–வது இயற்கை மருத்துவதினத்தினை முன்னிட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம்இணைந்து நடத்திய இயற்கை மருத்துவ கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர்  ..ராகுல் நாத், ...,  தலைமையில்  இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர்  மைதிலிகே.ராஜேந்திரன், ..,  துவக்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர். ஆண்டுதோறும் நவம்பர் 18 ஆம் நாள்  இயற்கை மருத்துவ தினம்   கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 6வது  இயற்கை மருத்துவ தினம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் 178 அரசு  யோகா மற்றும்இயற்கை மருத்துவ மையங்களிலும், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும்  அனைத்து இந்திய மருத்துவ மையங்களிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வு விழாவாக   இயற்கை மருத்துவ தினம்   கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல்நிறுவனத்தில் கொண்டாடப்படும் இயற்கை மருத்துவ தினத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கண்காட்சி, இயற்கை மருத்துவ சிகிச்சை அளிப்பது, மருத்துவ கருத்தரங்கம், ஆரோக்கிய அங்காடிகள், மூலிகை செடிகண்காட்சி, மருத்துவ பரிசோதனை   மற்றும் இயற்கை உணவு கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள்நடைபெறுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே ஐந்து இந்திய மருத்துவ முறைகளுக்கும், அதற்குரியஅரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது சிறப்பம்சமாகும். குறிப்பாக இரண்டு அரசு யோகா மற்றும் இயற்கைமருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதனால் தமிழ்நாடு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில்  இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகளான உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சைமசாஜ் சிகிச்சைநீராவி குளியல், வாழை இலைகுளியல், மண் குளியல், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, நீர் சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சைஇயற்கைமூலிகை சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குப்பிரசர்  நறுமண சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனை  போன்றவைஅளிக்கப்படுகிறது.

உடலையும்  அதன்  உள் உறுப்புகளையும் பலம் பெறச் செய்து அதை புத்துணர்ச்சி அடைய செய்கிறது. நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, ஆயுளை  நீட்டிகிறது. நோய்கள் வராமல் தடுக்கிறது. வந்தநோயினைக் கட்டுக்குள் வைக்கிறது. கோபத்தையும், பயத்தையும் நீக்கி மனதையும் உடலையும்சாந்தபடுத்துகிறது.

அதிகப்படியான உடல் எடையை குறைக்கிறது. தசைகளின் இறுக்கத்தை  தளர்வடைய செய்து  முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபட செய்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த யோகா பயிற்சியைஅனைவரும் மேற்கொண்டு உடல் நலத்துடன் வாழ வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், ..., இணை இயக்குநர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மரு.என்.மணவாளன், சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் (பொ) மரு.வெங்கடேஸ்வரன்உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.