விபத்துப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம் முதல் மேடவாக்கம் மெயின் ரோடு, ராஜாஜி நகர்சேர்ந்த பள்ளி மாணவி லியோஸ்ரீ (வயது 10) தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தமையால், விபத்து ஏற்பட்டஇடத்தினையும், கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்தையும்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு...ராகுல் நாத், ..., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, விபத்தில் பலியான சிறுமியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

மேலும், இச்சாலையில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாலை மிகவும் குறுகலாகஉள்ளது. இதில், பணிகள் முடிவடைந்துள்ள இடங்களின் நடுவில் சென்டர்மீடியன் அமைத்து இருசக்கரவாகனங்கள் செல்வதற்கு வழி வகை செய்திடுமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கீழ்க்கட்டளை ஏரியையொட்டி, நன்மங்கலம் ஏரி கிணறுகளில் முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதைதடுக்க, இன்றைய தினம் அப்பகுதியை ஆய்வு செய்து முறையற்ற போர்வெல் தொடர்புகள் மற்றும் மின்இணைப்புகளை துண்டிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள முறையற்ற 16 போர்வெல் தொடர்புகள் மற்றும் 34 மின் தொடர்புகள் என அனைத்துதொடர்புகளும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திருமதி.அழகுமீனா, ..., அவர்களின் மேற்பார்வையில் துண்டிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் லாரி மற்றும் இதர லாரிகள் செல்வதற்கான நேரம் முறைபடுத்தப்படும் என மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது, தாம்பரம் காவல் துணை ஆணையாளர் திரு.பவன் குமார் ரெட்டி, .கா.., குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் மரு.பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.