சர்வதேச குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு சார்பாக குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாட்டைஉருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு போஸ்டரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., வெளியிட்டார். அதனை மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.சங்கீதா குழந்தைகள் நல குழு தலைவர்திரு. தேவன்பு, மற்றும் உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் Chengalpattu District Mineral Foundation Trust உதவியில், தாம்பரம் சானடோரியம் அரசு சேவை இல்லத்தில் பயிலும் மாணவிகளுக்கு Skill Training Lab தொடங்கப்பட்டது. அதில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம். பெண் குழந்தைகளுக்குகற்பிப்போம் திட்டத்தின் (BBBP) கீழ் மாவட்ட திறன்மேம்பாட்டு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட கணினிபயிற்சி வகுப்புகள் முடித்துள்ள 21 மாணவிகளுக்கு பயிற்சி நிறைவு செய்ததற்கான மாவட்ட ஆட்சித்தலைவர பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
ACDS என்ற தொண்டு நிறுவனம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தன்னார்வ தொண்டுநிறுவனங்களை ஒருங்கிணைத்து குழந்தை உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு (Concern for Child Rights Network-CCRN) என்கிற கூட்டமைப்பை ஏற்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து குழந்தைகளின்உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்த பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாககடந்த 5 ஆண்டுகள் குழந்தை திருமணம் நடக்காத வண்ணம் மேற்படி அமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டகுழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்கள் மூலம் 25 ஊராட்சிகளை கண்காணித்ததன் அடிப்படையில் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆமூர், முள்ளிப்பாக்கம், தண்டலம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட குமிழி, திருக்குழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்திவாக்கம், லத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கானத்தூர், சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்தூர், அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வேலாம்பூர், புனிததோமையார்மலை ஒன்றியத்திற்குட்பட்ட திருநீர்மலை ஆகிய 9 ஊராட்சிகளில் குழந்தை திருமணம் நடைபெறாத நிலையை ஏற்படுத்திய ஊராட்சிகளுக்கு குழந்தை உரிமை செயல்பாட்டார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு சர்வேத குழந்தைகள்தினத்தை முன்னிட்டு பரிசு பொருள்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள்வழங்கினார்.
இக்கூட்டமைப்பின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 ஊராட்சிகளை தேர்வு செய்து, மேற்படி 25 ஊராட்சிகளில் 21 பேர் கொண்ட கிராம அளவிலான குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களை உருவாக்கிஇந்த அமைப்பின் மூலமாக மாதாமாதம் கூட்டம் நடத்தி குழந்தைகளுடைய பிரச்சனைகள் மற்றும் தேவைகள்கண்டறிவதோடு அவற்றை சரிசெய்வதற்கும், தீர்த்து வைப்பதற்கும் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்புசார்ந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.சங்கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவர்திரு. சரவணன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் திரு.பா. ராஜா, குழந்தைகள் நல குழு தலைவர்திரு.தேவன்பு, மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.