06.12.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எம்பஸி ரெசிடென்சி அருகில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மாவட்டநிர்வாகத்தின் சார்பில் படகு, லாரி போன்றவற்றின் மூலம் உடனடியாக மீட்க மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, வெள்ள நீரினால்சிக்கியுள்ள பொதுமக்களை படகு, லாரிகள் மூலம் மீட்புப் பணிகளை நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
இப்பகுதிகளில் மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்து அவர்களுக்கு தண்ணீர், உணவு ஆகியவற்றைவழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், அனைவருக்கும் முதலுதவிஅளிக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.
மேலும், அவரவர் வீடுகளிலேயே தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, பால், தண்ணீர் போன்றவற்றைஉடனடியாக வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்டவர்களில் சிலரை, அருகில் உள்ள பேருந்துகள் மூலம் பேருந்து நிலையம், இரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை பார்வையிட்டார். மற்றவர்களை வெள்ளநிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்துபாலா மற்றும் அரசு அலுவலர்கள்உடனிருந்தனர்.