தமிழ்நாடு முதலமைச்சர் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவித் தொகைவழங்கப்படும் அறிவித்ததைத் தொடர்ந்து, (16.12.2023) செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம்அகஸ்தியர் தெரு மற்றும் மோதிலால் நகர், திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் நிவாரண உதவித்தொகைவழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை செங்கல்பட்டு மாவட்டகண்காணிப்பு அலுவலர்/வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அரசு செயலாளர் சமயமூர்த்தி, இ.ஆ.ப. மற்றும் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் / தாம்பரம் மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர் ஆ.ஜான் லூயிஸ், இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதே போன்று, சோழிங்கநல்லூர், புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியம், வேங்கைவாசல், சந்தோசபுரத்தில் நிவாரண உதவித்தொகை வழங்குவதற்காக டோக்கன்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதை கண்காணிப்பு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், ரேசன் ஸ்மார்ட் அட்டை இல்லாதவர்கள் மற்றும் பயணாளிகளின் பட்டியலில் இடம்பெறாத நபர்கள்புயலினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களது பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் விண்ணப்பப்படிவம் பெற்று தங்களது வங்கி கணக்கு விவரங்களுடன் விண்ணப்பபடிவம் பூர்த்திசெய்து நியாய விலைக் கடைகளில் சமர்பித்தால் அவர்களின் விண்ணப்பம் பரிசீலினை செய்யப்பட்டு நிவாரணம்வழங்கப்படும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தாம்பரம்மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா, இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங், இ..ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.