சிறுபாண்மையினர் நலன் மற்றும்வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 15 நாட்கள் சுற்றிபார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டி கையேடு மற்றும் பை ஆகியவற்றை வழங்கிகுழு புகைப்படம் எடுத்து பேருந்தினை கொடியசைத்துதுவங்கி வைத்தார்.
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் “வேர்களைத் தேடி” திட்டம் துவக்கம். அயலகத் தமிழர்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத்தேடி” என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களை பாதுகாப்பாக வழிநடத்தவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன் “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை” செயல்பட்டு வருகிறது.
அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாக தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் தினம்” எனும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது. இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்திரவிட்டிருந்தார். இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 57இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் சென்னை வந்தடைந்துள்ளனர். இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துகுடி, கன்னியாகுமர், திருநெல்வேல், மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள். இத்துடன் தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் இடம்பெறுகின்றன. கலந்துரையாடல்களும், பயிற்சிவகுப்புகளும், இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலச்சாரம், வரலாறு, மொழியியில் உட்பட பல்வேறு திறன்களை கற்றுணர்வார்கள், மூன்றாவது ஆண்டாக அயலகத்தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று பகிர்ந்து கொள்வார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்திஐ.ஒ.எப்.எஸ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சார்ஆட்சியர் (செங்கல்பட்டு) வெ.ச.நாராயணசாமி இ.ஆ.ப. உதவிஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., மற்றும்அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.