செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தார்காடு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.1,25,62,818/– அரசு நலத்திட்ட உதவிகளை (19.01.2024) வழங்கினார்.
இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.1,25,62,818/– மதிப்பீட்டில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது போன்ற மனுநீதி நாள் முகாம்கள் ஊராட்சிகளில் தொடர்ந்துநடைபெற உள்ளது. மனுநீதி நாள் முகாம்களில் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்பதால் கிராமமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதுடன், ஒவ்வொரு துறையின் மூலம் அரசுமக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் அரசின் திட்டங்களைஎளிதாக கொண்டு சேர்க்க முடியும்.
மேலும் இந்த முகாம்களில் துறை சார்ந்த விளக்க கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொருதுறையிலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விளக்ககண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது இந்த வாய்ப்பை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி அரசின்நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவித்தார்.
இன்றைய மனுநீதி நாள் முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கல்குளம்கிராமத்தில் பாம்பு கடித்து இறந்தவரின் வாரிசுதாரருக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின்நிவாரண உதவி தொகை, 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள், 14 பயனாளிகளுக்கு பட்டாநகல், 2 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலிந்தோர் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு பழச் செடிகளின் தொகுப்புகள் மற்றும் நாற்றுகள், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 37 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டைகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு வேளாண்இடுபொருட்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 13 பயனாளிகளுக்கு சுய தொழில்தொடங்குவதற்காக ரூ.1.215 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் என மொத்தம் 98 பயனாளிகளுக்குரூ.1,25,62,818/– மதிப்பெட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள் மனு நீதி நாள் முகாமில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், சித்தாமூர் ஒன்றிய குழுத்தலைவர் வி.ஏழுமலை, செய்யூர் ஒன்றிய குழுத்துணைத் தலைவர் பிரேமா சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழினி, சித்தார்காடு ஊராட்சிமன்றத் தலைவர் சிற்றரசு, வட்டாட்சியர் சரவணன், அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.