செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் அரசு மருத்துவமனையில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். உடன் சார் ஆட்சியர் நாராயண சர்மா, இ.ஆ.ப. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.டி.அரசு, திருக்கழுக்குன்றம் பேரூராட்சித் தலைவர் யுவராஜ், உள்ளாட்சிபிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில்பாலாற்றின் குறுக்கே கி.மீ.0/410-ல் நெரும்பூர் புதுபட்டினம் சாலை முதல் எடையாத்தூர் வரை(இரும்புலிச்சேரி வழியாக) ரூ.51.87 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் திரும்பக் கட்டும் பணிகளுக்குகாஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் மு.பாபு ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். உடன் சார் ஆட்சியர் நாராயண சர்மா, இ.ஆ.ப. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.டி.அரசு, இரும்புலிச்சேரி ஊராட்சித் தலைவர் பாஸ்கர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.