இந்த ஆய்வு கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நீர் வளதுறைமூலம் செம்பரம்பாக்கம் , பாலாற்றிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும்மூலமாக நெம்மேலி கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் 150 எம்.எல்.டி தண்ணீர் தாம்பரம் மாநகராட்சிமக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தாம்பரத்தில் 2000 சிறிய மின் மோட்டார்கள் மூலம் பெருங்களத்தூர், மாடம்பாக்கம், பீர்க்கங்கரணை பகுதிகளில் தினசரி தண்ணீர் சப்ளை வழங்கப்படுகிளது. மேலும் போர்வெல்மூலமாக மின்மோட்டார் முலமாக தண்ணீர் தொட்டிகள் நிரப்பபடுகிறது. அவற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டால்உடனடியாக சரிசெய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. தாம்பரம் கிழக்கு , மேற்கு போன்ற பகுதிகளில் 5 லாரிகள் மூலம் குடிநீர் வசதி பொதுமக்களுக்கு செய்து தரப்படுகிறது. மண்டலம் 1 அனகாபுத்தூர், திரிசூலம்ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு குவாரிகள் மூலம் 1 எஎம்.எல்.டி.தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
பழவேலி, மாமண்டூர் பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு நகர பகுதி மக்களுக்கு தண்ணீர் சப்ளைசெய்யப்படுகிறது. மேலும் பாலாறின் மூலம் குடிநீர் தேவையை சரிசெய்வதற்க்கு 7.5 கோடி மதிப்பீட்டில் திட்டம்நடைபெற்று வருகிறது.மேலும் இந்த பணிகள் முடிந்தவுடன் இந்நகர பகுதி மக்களுக்கு தேவைக்கு அதிகமாககுடிநீர் வழங்கப்படும். மேலும் நகராட்சி லாரிகள் மற்றும் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம்செய்யப்பட்டு வருகிறது. மதுராந்தம் நகராட்சி பகுதி மக்களுக்கு போர் மூலம் தண்ணீர் விநியோகம்வழங்கப்படுகிறது, நந்திவரம் கூடுவாஞ்சேரியில் கூட்டு குடிநீர் திட்டத்தில் நகராட்சி மற்றும் கிராமகுடியிருப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட குடிநீரின் அளவு 2.170 எம்.எல்.டி ஆகும். இத்திட்டத்தில் மூலம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு பாலாற்று குடிநீர் வடிவமைக்கப்பட்ட குடிநீரின் அளவு தினசரி 6.70 லட்சம் லிட்டர். மறைமலைநகர் நகராட்சிக்கு 10 வார்டுகளில் . பாலாற்று குடிநீர் வடிவமைக்கப்பட்ட குடிநீரின்அளவு தினசரி 6.24 லட்சம் லிட்டர். மேலும் 19 கிராம குடியிருப்புகளுக்கு வடிவமைக்கப்பட்ட குடிநீரின் அளவு8.76 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது , மேலும் லாரிகள் மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது. மேறும் கோடைகாலங்களில் தண்ணீர் தேவை ஏற்படும் பட்சத்தில் வேளாண்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளகிணறுகளில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
அச்சிறுபாக்கம் பகுதிகளில் 15 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வசதி தினசரி வழங்கப்பட்டு வருகிறது. திருக்கழுக்குன்றம், சித்தாமூர் பகுதிகளில் தண்ணீர் தேவைபடும் எனில் எதிர்வரும் காலங்களில் புதிதாகபோர்வெல் அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். புதுப்பட்டிணம் பகுதிகளில் பைப்லைன் மூலமாக தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நீர்வளத்துறைசார்பில் 5 கிணறுகள் மற்றும் 2 போர்வெல் மூலமாகவும் அச்சிறுபாக்கம் மேல்மருவத்தூர் பகுதி மக்களுக்குகுடிநீர் வசதி செய்யப்பட்டுவருகிறது.
மேலும் மாவட்டத்தில் மின் தடை குறித்து புகார் வரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், குறைந்த மின் அழுத்தம் இருக்கும் பட்சம் மின்கம்பம் அமைக்கவும் அறிவுறுத்தினார். தண்ணீர் மற்றும்மின்சாரம் குறித்து புகார்கள் எழும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க துறைசார்ந்த அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திருமதி அழகு மீனா இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்செல்வி.அனாமிகா ரமேஷ் இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., அவர்கள்மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்