செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிடும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் .ச.அருண்ராஸ், இ.ஆ.ப., வழங்கினார்

(18.06.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவற்றை வழங்கும் தொடர்பு துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான திருநங்கைகள் நலனுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இன்றைய முகாமின் போது, திருநங்கைகளுக்கான நல வாரிய அடையாள அட்டைகள், குடும்ப அட்டை,வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி, இலவச வீட்டு மனை பட்டா, மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கான சிறப்பு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.1500/– வழங்கும் திட்டம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டு விண்ணப்பித்த 10 திருநங்கைகளுக்கு உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.