செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் 20 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்டார். மேலும் CSR (Corporate Social Responsibility) நிதி மூலம் ரூ.11,120/- மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகளும், 1 பயனாளிக்கு ரூ.48,993/- மதிப்பீட்டில் பிரெய்லி ரீடர் (Braillee Orbit Reader), 4 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும், ரூ.31,084/- பிரெய்லி கை கடிகாரம் 19 பயனாளிகளுக்கும் ரூ.12,300/- மதிப்பீட்டில் 2 பயனாளிக்கு கார்னர் சேர் ஆக மொத்தம் ரூ.1,35,097/- மதிப்பீட்டில் 30 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மனு அளித்த அரைமணி நேரத்தில் 2 பேருக்கு சக்கர நாற்காலி மற்றும் ஒருவருக்கு பெட்டி கடை வைப்பதற்கு அனுமதி ஆணை வழங்கினார் . உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.