தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி (19.07.2024) சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமஅமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு
செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட புனித தோமையர் ஒன்றியம், பொழிச்சலூர் மற்றும் கவுல் பஜார் ஆகிய கிராமங்களில்மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகள் மற்றும்பூங்காக்களை மேம்படுத்துவதற்காக சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்துரூ.11.37 கோடி நிதியை செங்கல்பட்டு மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் செல்வி.அனாமிகாரமேஷ், இ,ஆ.ப., அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., , வீட்டு வசதிமற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத், இ.ஆ.ப.,
மற்றும்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.