செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  பொதுமக்களிடம் 249 கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகிளில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது என பொதுமக்கள் சார்பிலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பிலும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின்வெட்டு தொடர்பாக மின் வாரிய அலுவலரிடம் ஆலோசனை மேற்கொண்டு, உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென அமைச்சர்  மின் வாரிய அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  பி.சுபா நந்தினி, சார் ஆட்சியர்  வெ.நாராயண சர்மா, இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அனாமிகா ரமேஷ், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர்  ரவி மீனா, இ.வ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அறிவுடைநம்பி, மாவட்ட வழங்கல் அலுவலர்  சாகிதா பர்வீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  கதிர்வேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்)  நரேந்திரன், திருக்கழுக்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  தமிழ்மணி, மூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்  செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்  உதயா கருணாகரன், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர்  எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்  கண்ணன், செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர்  தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகர் மன்றத் தலைவர்  ஜெ.சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்றத் தலைவர்  கார்த்திக் தண்டபாணி, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்  ஆர்.டி.அரசு, புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத் குழுத் தலைவர்  சங்கீதா பாரதிராஜன், ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவர்  வி.ஜி.திருமலை, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர்  யுவராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.