செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெற்ற 126 நபர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., பணிநியமன ஆணைகளை வழங்கினார். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 49 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 211 ஆண் வேலைநாடுநர்களும் 226 பெண் வேலைநாடுநர்களும் மொத்தம் 437 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்முகாமில் 13 மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் கலந்து கொண்டவர்களில் 126 வேலைநாடுநர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. அதில் 54 ஆண்கள் மற்றும் 72 பெண்கள் ஆவர். பணிநியமனம் பெற்றவர்களில் 3 வேலைநாடுநர்கள் மாற்றத்திறனாளிகள் ஆவர். மேலும், முதற்கட்ட தேர்வில் 217 வேலைநாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.