செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (27.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு சுமார் 135 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மழைக்காலம் நெருங்குவதனால் ஏரி, குளங்களை தூர்வாரி சீர் செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் ஏரி, குளங்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாசன வடிகால் அமைத்துத் தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். பல்வேறு கிராமப் பகுதிகளில் தார் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை சரி செய்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. மகளிர் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வேளாண் விதைகள் போதிய அளவில் இருப்பில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். விவசாயிகளுக்கு தேவையான உரம் தட்டுபாடின்றி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் . சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ்கள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர். இயற்கை விவசாயத்திற்கு ஊக்கத்தொகை வழங்கிட கோரிக்கை வைத்தனர். உதயம்பாக்கம்- படாளம் அணைகட்டும் திட்டத்திற்க்கு அரசிடம் இருந்து நிதி ஒதுக்குவதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
சிவன் சம்பா நெல் ரகம் சர்க்கரை நோயை குணப்படுத்தக்கூடிய நெல் வகையாக உள்ளது. அதனை விவசாயிகளை பயிரிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மணிலா விதை மானியம் குறைவாக உள்ளது அதிகப்படுத்தி வழங்க வேண்டும். தனியார் நிறுவன பால் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் பேருந்து நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வண்டலூர் விவசாய சங்கத்தினர் மலையடிவாரம் ஏரியினை தூர்வாரி வண்டலூர் சித்தேரி அருகில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ ஊர்தி வழங்கப்பட்டுள்ளது. அதனை கட்டணமில்லா தொலைபேசியில் அழைப்பதற்கு 1968 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் அது அச்சரப்பாக்கம், சித்தாமூர் மற்றும் செய்யூர் போன்ற கிராமங்களில் காலை முதல் மாலை வரை மருத்துவ சேவையினை செய்கின்றனர். சவுக்கு மரக்கன்றுகள் tnpl என்ற அரசிடம் இருக்கிறது. அதை விவசாயிகளுக்கு பெற்றுத் தருமாறு கோரிக்கை வைக்கிறோம். அதனை விவசாயிகளுக்கு பெற்று தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இந்த மாவட்டத்தில் வனத்துறையின் மூலம் சவுக்கு மரக்கன்று ஏற்படுத்தி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் மதுராந்தகம் உயர் மட்ட கால்வாயை உயர்த்தி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். விழுதமங்கலம் பகுதியில் சவுக்கு மரக்கன்று எரிந்துவிட்டது அதற்கான இழப்பீடும் இன்னும் வழங்கவில்லை. இலத்தூர் பகுதியில் உள்ள பாசன கால்வாய்களை 100 நாள் வேலை செய்யும் வேலையாட்கள் கொண்டு தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடை நம்பி, சார் ஆட்சியர் நாராயண சர்மா, இ.ஆ.ப., வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) செல்வபாண்டியன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குநர் ஜெயந்தி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் தமிழ்ச்செல்வி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.