செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் (08.10.2024) பொதுமக்களிடம் 255 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்குரூ. 51.87 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் முருகமங்கலம் திட்டப்பகுதியில் 40 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், ஆகியவற்றை அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரனித், இ.கா., மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா, இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், வருவாய் கோட்டாட்சியர்கள் தியாகராஜன், சிராஜ் பாபு, திருக்கழுக்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், செய்யூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஏழுமலை. செங்கல்பட்டு நகர்மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகர் மன்றத் தலைவர் ஜெ.சண்முகம், ஆலப்பாக்கம் வனக்குழுத் தலைவர் வி.ஜி.திருமலை, திருப்போரூர் ஆத்ம வேளாண்மை குழுத் தலைவர் பையனூர் எம்.சேகர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.