(8.10.2024) செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானிடோரியம், ஜட்ஜ் காலனில் உள்ள அரசு சமூக சேவை இல்லத்தில் சமூகநலன் மற்றும் உரிமையியல் துறையின் சார்பில் மாணவியர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் நோக்கமாக செங்கல்பட்டு இந்தியன் வங்கி சார்பாக ரூ.1.63 இலட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும் சேவை இல்லத்தில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் விளையாடுவதற்கான விளையாட்டு திடலினை துவக்கி வைத்து, இறகு பந்து, கால்பந்து போன்றவை விளையாடும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கேரம் போர்டு, செஸ் போன்ற விளையாட்டுகளை மாணவிகளுடன் விளையாடினார். தொடர்ந்து மாணவிகளுடன் சேர்ந்து கேக் வெட்டி நிகழ்ச்சியை மகிழ்வுடன் கொண்டாடினார். மேலும், சிறப்பாக தகவல் தொடர்பு புரிந்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா,உதவி இயக்குநர் (கனிமம்) இளங்கோ மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் உதயகுமார், ஸ்கவுட் விளையாட்டு நிர்வாகி திரு.பாபு, மற்றும் அரசு சேவை இல்ல மாணவிகள் பொதுமக்கள் அரச அலுவலர்கள் கலந்து கொண்டனர்.