செங்கல்பட்டு மாவட்டம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2024–2024 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளி, குறுவளம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநிலஅளவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைவடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலைபண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இக்கலைத் திருவிழா பல்வேறு கலைவடிவங்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும். தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டைக் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வழிவகுக்கும். பள்ளி அளவில் 22.08.2024 முதல் 07.09.2024 நாட்களில் நடைபெற்ற போட்டிகளில் 60,748 மாணவர்கள் பங்குபெற்று அதில் மாணவர்கள் முதலிடம் பெற்றார்கள்.
வட்டார அளவில் 02.11.2024 முதல் 07.11.2024 நாட்களில் நடைபெற்ற போட்டிகளில் 38,151 மானாவர்கள் பங்கு பெற்று அதில் 5,495 மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்கள். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் வட்டார அளவில் 163 மானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்பொழுது 11.11.2024 மற்றும் 13.11.2024 நடைபெற உள்ள கலைத் திருவிழா போட்டிகளில் வட்டார அளவில் தெரிவு செய்யப்பட்ட 1,538 மாணவர்கள் மாவட்ட அளவில் பங்கு பெற உள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலை அரசன், கலை அரசி விருதுகளும் வழங்கப்படும். நமது மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் 44 மாணவர்கள் முதலிடம் பெற்றனர். 2023-2024 ஆண்டு 19 மாணவர்கள் முதலிடம் பெற்றனர். ஒரு மாணவர் வெளிநாடு சுற்றி செல்ல தேர்வாகி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா, இ.ஆ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சொ.கற்பகம், செங்கல்பட்டு நகர மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.