(09.12.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வாரத்தினை முன்னிட்டு ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் தொடர்பான விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் “உலக நவீன வாசக்டமி வாரம்” அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இவ்வருடம் உலக நவீன வாசக்டமி வாரத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை ரூ.1100/–, ஊக்குவிப்பார்களுக்கு ரூ.200/– வழங்கப்பட்டு வருகிறது. இந்த நவீன குடும்ப நல சிகிச்சையானது நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் செய்யப்படுகிறது.
இதில் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஜி.சிவசங்கர், இணை இயக்குநுர் (நலப்பணிகள்) மரு.தீர்த்தலிங்கம், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜோதிகுமார், துணை முதல்வர் மரு.அனிதா, துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.கிருஷ்ணகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பானுமதி, உதவி பேராசிரியர் மரு.சரண், துணை இயக்குநர் மரு.காளீஸ்வரி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திருமதி.தாரா, மற்றும் குடும்ப நல செயலக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.