செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.74 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டஉதவிகளை இன்று (13.09.2023) வழங்கினார். இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது,
இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.74 இலட்சம் மதிப்பீட்டில் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது போன்ற மனுநீதி நாள் முகாம்கள் ஊராட்சிகளில் தொடர்ந்துநடைபெற உள்ளது. மனுநீதி நாள் முகாம்களில் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்பதால் கிராமமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதுடன், ஒவ்வொரு துறையின் மூலம் அரசுமக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் அரசின் திட்டங்களைஎளிதாக கொண்டு சேர்க்க முடியும்.
மேலும் இந்த முகாம்களில் துறை சார்ந்த விளக்க கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொருதுறையிலும் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் விளக்ககண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது இந்த வாய்ப்பை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி அரசின்நலத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம் என தெரிவித்தார்.
இன்றைய மனுநீதி நாள் முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமூக பாதுகாப்புதிட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் அடைந்த 10 நபர்களின்குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை, 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், வேளாண்மைத் துறையின்சார்பாக 6 பயனாளிகளுக்கு விவசாய இடுபொருட்கள், தோட்டக்கலைத் துறையின் சார்பாக 11 பயனாளிகளுக்கு பழச்செடிகள் தொகுப்பு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 4 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக 37 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல வாரியஅட்டைகள் மற்றும் 3 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் என மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.55.74 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள் மனு நீதி நாள் முகாமில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சுபா நந்தினி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி.சாகிதாபர்வின், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் திரு.தியாகராஜன், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்திருமதி.கீதா கார்த்திகேயன், நெட்ரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பாஸ்கரன், அரசுத்துறை உயர்அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.