மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை காஞ்சிபுரம்நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைஅமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள் திறந்து வைத்தார்.
முதலாவதாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரையப்பாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்2022-23–ன்கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும், முன்னூத்தி குப்பம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதி த்திட்டத்தின் கீழ் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்தையும், கினார் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2022–2023ன் கீழ் தாத்தான்குப்பம் முதல்கே.கே.புதூர் வரை 10/600 கிலோமீட்டர் தூரம் வரை கிளியாற்றின் குறுக்கே ரூ.16.67 கோடி மதிப்பீட்டில்உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முன்னூத்தி குப்பம் ஊராட்சியில் நபார்டு–27 திட்டம்2021–22–ன்கீழ் முள்ளி முதல் தேவாதூர் தச்சூர் சாலை வரை ரூ.175 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டசிறு பாலத்தை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் திறந்துவைத்தார். மேலும் முன்னூத்தி குப்பம் ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2022–2023ன்கீழ் தாத்தான்குப்பம் முதல் கே.கே.புதூர் வரை 5/300 கிலோமீட்டர் தூரம் வரை (கல்குளம் ஓடையில்) ரூ.199 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2020-21–ன்கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடிகட்டிடத்தையும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொறப்பாக்கம் ஊராட்சியில் அனைத்துகிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021–22–ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையகட்டிடத்தையும், களத்தூர்–1, களத்தூர்–2 ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021–22–ன் கீழ் தலா ரூ.11.97 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களையும் திறந்து வைத்துஅங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளையும், பரிசு பொருட்களையும் வழங்கினார்.
மேலும், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல் கீழ்மின்னல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7.90 இலட்சம் மதிப்பீட்டில்புதியதாக கட்டப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் சமையல் கூடத்தை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி திரு.ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்டஊராட்சி குழு தலைவர் திருமதி.செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்திருமதி.இந்து பாலா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.சற்குணா, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.கண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுஅலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.