புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (3.7.2023) செங்கல்பட்டுமாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து  நிலையத்திற்கான இடத்தினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைஅமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழும அமைச்சர் () தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமானதிரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே இருக்கின்ற பழைய பேருந்து நிலையத்தில் அதிகமானபோக்குவரத்து நெரிசல் காரணமாக, புதிதாக பேருந்து நிலையம் வேண்டும் என அன்பிற்கினிய அண்ணன்மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன்அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜி.செல்வம் அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்திருமதி.வரலட்சுமி மதுசூதனன் ஆகியோரின் கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சியில்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.40 கோடிமதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்குண்டான இடத்தினை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று (03.07.2023) ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.

 அமையவிருக்கின்ற இப்பேருந்து நிலையத்தில் சுமார் 46 பேருந்துகள் நிற்கும் வகையிலும், அதேபோன்று 69 பணிமனைகள் நிறுத்துவதற்குண்டான வகையிலும் அமைக்கப்பட இருக்கின்றன. இப்பேருந்து நிலையத்தில் 67 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 782 இரு சக்கர வாகனங்கள்நிறுத்துமிடமும் மற்றும் 30 கடைகளும் அமையவுள்ளது. மேலும், இப்பேருந்து நிலையம்அமைக்கப்பட்டால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்லவும், பயணிகள்மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளோடு இப்பேருந்து நிலையம் அமையும் என்பதைமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள்தெரிவித்தார்.

 இந்த ஆய்வின்போது  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜி.செல்வம் அவர்கள், வீட்டு வசதிமற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா ..., அவர்கள், சென்னைபெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா ..., அவர்கள், முதன்மைச்செயல் அலுவலர் திருமதி.கவிதா ராமு ..., அவர்கள், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு... ராகுல்நாத், ..., அவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.செம்பருத்தி துர்கேஷ் அவர்கள், மாவட்டநகர்மன்றத் தலைவர் திருமதி.தேன்மொழி நரேந்திரன் அவர்கள், ஆலப்பாக்கம் வனக்குழு தலைவர்திரு.வி.ஜி.திருமலை அவர்கள், சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி அவர்கள்மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.