பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சி.பி. ராமசாமி சாலையில் உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம், நகர்ப்புர சமுதாய நல மையத்தினையும் பார்வையிட்டு மையத்தின்செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்தக் குழுவினர் நகர்ப்புர நலவாழ்வு மையம், நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புர சமுதாயநல மையத்தில் பராமரிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் வருகைப்பதிவேடு, மருத்துவஉபகரணங்கள், மருந்துப் பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும்சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) குழுவினர் மேற்கண்ட மையங்களை பார்வையிட்டு, மையங்களின்செயல்பாடுகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறதுஎனவும், மருத்துவ உபகரணங்களை மேலும் நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றிடவும், மருத்துவச்சேவைகளுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் விஷ் பவுண்டேஷன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் டாக்டர் விவேக் யாதவ், திரு.சாயன் ராய்சௌத்ரி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், மருத்துவக் குழுவினர் மற்றும் அலுவலர்கள்உடனிருந்தனர்.