தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கான“தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னத திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்பி .கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கான “தமிழ்ப் புதல்வன்” என்ற உன்னதத்  திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  திரு.பி.கே.சேகர்பாபு சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் மாணவர்களுக்கு பற்று அட்டைகளை  வழங்கி “தமிழ்ப் புதல்வன் திட்டத்தை” தொடங்கி வைத்தார்.  

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்கிற “புதுமைப்பெண்” திட்டத்தை தொடர்ந்து மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அவர்கள் உயர் கல்வி பயிலும் போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்  மூலம் பயனடையலாம்.

சென்னை மாவட்டத்தில் முதற்கட்டமாக 135 கல்லூரிகளில் 10,304 மாணவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்க்கு நேரடியாக இத்திட்டத்தின் மூலம் ரூபாய். 1000/- பற்று வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப ம், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பல்வேறு   துறை மாணவர்கள் பயனடைகின்றனர் . இத்திட்டமானது பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை, வங்கித் துறை மற்றும் சமூக நலத் துறை மூலம் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டுப்படுகிறது.  

இந்நிகழ்வில் மாண்புமிகு மேய ர்திருமதி ஆர்.பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய  சட்டமன்ற உறுப்பினர்கள்  திரு. த. வேலு (மயிலாப்பூர்), திரு. ஜே. எம்.ஹச். ஹசன்மௌலானா (வேளச்சேரி), திரு.ஏ.எம்.வி.பிரபாகர ராஜா(விருகம்பாக்கம்), திரு.ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார்,சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப.,மாவட்ட சமூக நல அலுவலர்கள்செல்வி ம. ஹரிதா, திருமதி முத்துச்செல்வி. வி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு. த. தனராஜ் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.