பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள ஓட்டுநர்களுக்கு இயந்திரப் பொறியியல் துறையின் சார்பில் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக சிறப்பு பரிசாக 4 கிராம்தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், பணிக்காலத்தின்போது வாகனத்தை விபத்தின்றி இயக்கியிருத்தல் (Accident free service), வாகனங்களைப் பராமரிக்கும் தன்மை (Maintenance of Vehicle), எரிபொருள் சேமிப்பு (Fuel Consumption), நன்னடத்தை மற்றும் தொடர் பணி வருகை (Attendance and General Behavior) ஆகியவற்றின் அடிப்படையில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 113 ஓட்டுநர்களுக்கு தலா 4 கிராம்தங்கம் என ரூ.34.35 இலட்சம் மதிப்பீட்டில் தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர்ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர். லலிதா, இ.ஆ.ப., இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, வட்டாரதுணை ஆணையாளர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்தியம்), கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு) மற்றும் தலைமைப்பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.