சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத்தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ...,  (22.01.2024) ரிப்பன்கட்டட அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத்தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், 2024-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம்தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல்கள் கடந்த 27.10.2023 அன்று வெளியிடப்பட்டன.

01.01.2024 அன்று தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள்சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம்மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து உரிய படிவங்கள் 27.10.2023 முதல் 09.12.2023 முடிய பெறப்பட்டன.  அவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரால்நேரடி ஆய்விற்கு பின்னர் சட்டமன்றத் தொகுதியினை சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால்படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.  ஏற்பளிப்பு செய்யப்பட்டபடிவங்கள் அடிப்படையில் 2024ஆம் ஆண்டிற்கான துணைப் பட்டியல்கள் உடனான ஒருங்கிணைந்தஇறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன.  அத்துணைப் பட்டியல்கள் உடனானஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (22.01.2024) வெளியிடப்பட்டுள்ளது.  வாக்காளர்பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, உதவிஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வையிடலாம்.  மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம்.