அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்ற 
”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி..நகர் மண்டலம், வார்டு-78, சூளை, அஷ்டபுஜம் சாலை, உமா சுராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றமக்களுடன் முதல்வர்சிறப்பு முகாமினையும், அண்ணாநகர் மண்டலம், வார்டு-108, சேத்துப்பட்டு, சத்தியமூர்த்தி சாலை சமூக நலக்கூடத்தில் நடைபெற்றமக்களுடன் முதல்வர்சிறப்பு முகாமினையும் இந்து சமயம் மற்றும் அறநிலைய த்துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு  (24.01.2024) தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிபார்வையிட்டார்.

இந்த முகாம்களில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தித் துறை / தமிழ்நாடு மின்சாரவாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின்போது, மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், மண்டலக்குழுத் தலைவர்கள் சரிதா மகேஷ்குமார், கூ.பி.ஜெயின், நியமனக் குழு உறுப்பினர்  சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் சுமதி, புனிதவதிஎத்திராஜன், ஸ்ரீஇராஜேஸ்வரி, எல். சுந்தர்ராஜன், மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்