பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (WVS), தமிழ்நாடுவிலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன்இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கானபயிற்சி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., (08.07.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில்தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூடுதல் தலைமைச்செயலாளர்/ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில்உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம் (WVS), தமிழ்நாடுவிலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன்இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில்தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனமாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள்பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும்மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறுநடவடிக்கைகளை சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிப்பகுதிகளில் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் இன்றுநடைபெற்றது.
மாநகராட்சியில் 2018ஆம் ஆண்டு 59 ஆயிரம் தெருநாய்கள்இருந்தன. தற்பொழுது பல்வேறு கருத்துக்களின்அடிப்படையில் இராயபுரம் மண்டலத்தில் களஆய்வுமேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துமண்டலங்களிலும் இந்த கணக்கெடுப்பு பணியினைமுழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகளாவியகால்நடை சேவை நிறுவனத்துடன் இணைந்து பணியினைமேற்கொள்ள இன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வற்கான வழிமுறைகள்குறித்தும், தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடைசெய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண்அல்லது பெண் நாய்கள் என அனைத்து விவரங்களையும் சே
கரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.