மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள்மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன்மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று(18.10.2023) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
மேதகு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில்பயிலும் மாணவ, மாணவியர்களிடையே அறிவியல் மற்றும்அண்டம் சம்பந்தமாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும்பொருட்டு, நாட்டிற்கு பெருமை சேர்த்த சந்திராயன்-3 மற்றும் அண்டம் ஆகியவற்றின் மாதிரி வடிவங்களை தயார்செய்து, அறிவியலாளர்களின் சாதனைகள், விண்வெளிசார்ந்த விளக்கங்களை எடுத்துரைக்கும் வகையில்18.10.2023 முதல் 14.11.2023 வரை அறிவியல்கண்காட்சியானது நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியானது, அனைத்து விடுமுறைநாட்கள் உள்பட ஒரு மாதகாலம் தினந்தோறும் காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். கண்காட்சியில் வானவியல் குறித்து காலை நான்குநிகழ்வாகவும் மாலை நான்கு நிகழ்வாகவும் மாணவர்களுக்குவிளக்கமளிக்கப்படும். தினந்தோறும் மாலை 6 மணி முதல்இரவு 8.30 மணி வரை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வான்நோக்கி மூலம் வான் செயல்களைப் பார்வையிடவும், இதுகுறித்து விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியின் மூலம் மாணவர்கள் உள்ளிட்டபொதுமக்கள் சந்திராயன் மற்றும் வானவியல் குறித்துஅறிவியலை அறிந்திட நல் வாய்ப்பாக அமையும்.
இந்நிகழ்வில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்டாக்டர் நா.எழிலன், மதிப்பிற்குரிய துணை மேயர்திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், துணைஆணையர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., கல்விஅலுவலர், உதவிக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.