தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட். துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு 8,700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழகஅரசும், மாநகராட்சி நிர்வாகமும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மழைநீர் வெளியேற்றுதல், உணவுமற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல், நோய் தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல்போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
முன்னதாக, சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலத்துக்குட்பட்ட பெரம்பூர் பேரக்ஸ் சாலை, லட்சுமி மஹாலில் அமைச்சர் டாக்டர் க.பொன்முடி மற்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால், பிஸ்கட்கள், பிரட், போர்வை, குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
அந்த வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராயபுரம் மண்டலம், 54 மற்றும் 59வது வார்டுகளை சேர்ந்த, டி.என்பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.சி.போஸ் சாலை, தேவராஜ் முதலியார் தெரு, மெமோரியல் ஹால் சாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும்4,900 குடும்பங்களுக்கும், பிராட்வே, ஜாபர் ஜெராங் தெருவில் 60வது வார்டை சேர்ந்த 1,500 குடும்பங்களுக்கும், டான்பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் 56வது வார்டை சேர்ந்த 2,300 குடும்பங்களுக்கும்ஆக மொத்தம் 8,700 குடும்பங்களுக்கு அரிசி, பால், போர்வை, பிரட், பிஸ்கட்கள், குடிநீர் போன்ற நிவாரணஉதவிகளை வழங்கினார்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கடந்த அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகத் துறைமானிய கோரிக்கைகளில் 6500 கோடி ரூபாய் மழை நீர் கட்டமைப்புகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சட்டமன்ற குறிப்புகளில் இருக்கின்றது. 2021 ஆம்ஆண்டு இன்னைக்கு வெள்ளை அறிக்கை கேட்கின்ற கருப்பு உள்ளம் கொண்ட அந்த மனிதர், 2021 ஆம்ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் போதிய கட்டமைப்புகளை அமைத்து விட்டோம், சிங்கப்பூர்போன்று எவ்வளவு பெருமழை வந்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என்று கூறினார். அவர் ஆட்சிமுடிவுற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டுஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் போது இன்றைய மழையின் அளவில் 50 சதவீத மழையே பெய்த போதுசென்னையே தத்தளித்து கொண்டிருந்ததை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ரூ.4000 கோடிக்குஎங்கெல்லாம் பணிகள் நடைபெற்றிருக்கிறது என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, துறையின் அமைச்சர் அவர்கள் தெளிவாக எடுத்து கூறி இருக்கின்றார்.
நாங்கள் திரும்ப கேட்கிறோம் நீங்கள் ரூ.6,000 கோடியை செலவு செய்வதற்கு வெள்ளை அறிக்கைவிலாவாரியாக வெளியிட தயாரா என்பதுதான். குற்றம் பார்ப்பின் சுற்றம் இருக்காது என்பார்கள். இப்போதுமக்களை பாதிப்பிலிருந்து மீட்பதற்கு அனைத்து கரங்களும் ஒன்றிணைந்து களத்தில் நிற்க வேண்டுமே தவிர, தொடர்ந்து அவதூறு பேசுவதை தவிர்த்து, மக்கள் பணியில் ஈடுபடுபவர்களை உற்சாகப்படுத்துவதற்கும், பணிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கும் ஒத்துழைப்பு தருவது தான் எதிர்க்கட்சித் தலைவரின் முடிவாகஇருக்க வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எடுத்துக் கொள்ளப்பட்ட பணிகள்அனைத்தும் 90% நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மாற்றமில்லாத கருத்தாகும். மேலும் இந்த கனமழையில்ஒரு சில தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீருக்கு தேவையான கட்டமைப்புகளை அமைக்க தற்போதுதிட்டமிட்டு இருக்கின்றோம். அடுத்து வருகின்ற மழைக்காலங்களில் அந்தப் பகுதியிலும் தண்ணீர் தேங்காதஅளவிற்கும், இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் பெய்த மழை 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட அதிகமானது. மழையால் ஏரிகள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் நிரம்பிவந்ததை நீங்களே கண்டீர்கள். மழை விட்டாலும்கால்வாய்களிலிருந்து செல்லும் தண்ணீர் முகத்துவாரங்களில் பெரிய அளவு உள்வாங்கவில்லை. அதனால் தான்இரண்டு நாட்கள் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்த நிலை இருந்தது. இப்போது 95 சதவீதபகுதிகளில் இயல்பு நிலை திரும்பியிருக்கின்றது. எந்தந்த மாவட்டங்களில் புயல் மழையால் பாதிப்பு இல்லையோ அந்த மாவட்டங்களிலிருந்து பணியாளர்களை அழைத்து வந்து தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு சூப்பர் சக்சன் மெஷின்களை கொண்டு வந்து துரிதப்பணியை மேற்கொண்டுள்ளோம். சென்னையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாவட்ட பணியாளர்கள் தூய்மை பணியிலேஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
மாநகர் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குப்பைகளினால் நோய்த்தொற்று வந்து விடக்கூடாது என்பதற்காக குப்பைகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்துகொண்டிருக்கின்றது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு 34 சென்டிமீட்டருக்கு அதிகமாக, 47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பெருமழை பெய்துள்ளது. இருப்பினும் இரண்டு நாட்களில் மாநகரம் இயல்புநிலைக்கு திரும்பி இருக்கிறது என்றால் அது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கண் துஞ்சாமல் ஆற்றியஉழைப்பின் காரணமாக தான். இன்னும் ஒரிரு நாளில் மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் முழுமையாகஇயல்புநிலை திரும்பும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன். உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்புஇயக்கக இயக்குநர் ப.கணேசன் இ.ஆ.ப., இராயபுரம் மண்டலக் குழுத் தலைவர் திரு.ஸ்ரீராமுலு, மண்டலஅலுவலர் ஏ.எஸ் முருகன், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.