பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி..நகர் மண்டலம்மேயர்ன் 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டபொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி..நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி உட்பட பலர் கலந்து கொண்டனர். பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி..நகர் மண்டலத்திற்குட்பட்ட மேயரின் 74வது வார்டு பகுதிகளில் இதுநாள்வரை மங்களாபுரம், பிரிஸ்லி நகர், ஏகாங்கிபுரம், செல்வபெருமாள்கோயில் தெரு, சந்தியப்பன் தெருக்கள், நேரு ஜோதி நகர், சாஸ்திரி நகர், ஆதிசேச நகர், ராஜீவ் காந்தி நகர், சேமாத்தம்மன் காலனி, குளக்கரை சாலை, பெரம்பூர் செக்கு தெரு, காவாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 4,950 குடும்பங்களுக்கு அரிசி, பால் பவுடர் பாக்கெட்டுகள், கோதுமை மாவு பாக்கெட்டுகள், போர்வை மற்றும் ரொட்டிஉள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேயர் ஆர்.பிரியா  திரு.வி..நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, புதிய வாழைமாநகர், கிருஷ்ணதாஸ் சாலை, சாமியார்மடம், போல்டன் தெரு, பெரம்பூர்குறுக்குத் தெரு, சந்திரயோகி சமாதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1,050 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் இன்று 15.12.2023)  வழங்கப்படுகிறது.