திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி..நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட சந்தியோகி சமாதி தெருவில்உள்ள முதாயக் கூடத்தினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா  (27.12.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சமுதாயக் கூடத்தினைப் புதுப்பிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுவாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, வார்டு-74க்குட்பட்ட மங்களபுரி, கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடிமையக் கட்டடப் பணியினையும், நியூ வாழைமா நகர், 8ஆவதுதெருவில் மாண்புமிகு மேயர் அவர்களின் மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்இறகுப்பந்து கூடத்தின் கட்டுமானப் பணியினையும்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாகவும், விரைவாகவும் முடித்திடஅலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், சாஸ்திரி நகரில்கனமழையின் காரணமாக சேதமடைந்த சாலையினைசீரமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வார்டு-71க்குட்பட்ட ஜமாலியா பகுதியில் அமைக்கப்படஉள்ள கால்பந்து மைதானத்திற்கான இடத்தினைப்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.