இயக்குநர்–நடிகர் சேரனின் தந்தை எஸ். பாண்டியன் அவரதுசொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் இயற்கை எய்தினார். 84 வயதான பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெற்றது.