குடியை பற்றி வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்‘

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல்குட்டி தாதாஎன்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்இந்தப்படத்தின் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்விஜய் சிவன் அறிமுகக்  கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ்புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர  நாளை இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றியகலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.*************

வழக்கமாக குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழையும்போது தாங்கள் இயக்கி வெற்றிபெற்றகுறும்படங்களையே முழுநீள திரைப்படமாக உருவாக்குவது வழக்கம். அதேபோல் இயக்குனர் பிரகாஷும் தனதுகுட்டி தாதாகுறும்படத்தையே திரைப்படமாக எடுக்கலாம் என முயற்சித்தபோது அதன் பட்ஜெட் பெரியஅளவில் இருந்ததால் முதலில் இந்த குடிமகான் படத்தை எடுப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்துகளத்தில் இறங்கி விட்டார்.

இந்தப்படம் பற்றி இயக்குனர் பிரகாஷ்.N கூறும்போது, “வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய குடும்பபாங்கான படமாக இந்தகுடிமகான்உருவாகியுள்ளது. குடியை பற்றிய படம் என்றாலும் அதைதப்பாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையையும் குடிமகன் என்று சொல்வார்கள்.. குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், ‘குடிமகானாகஇருந்தால்எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளதுஎன்கிறார்.

இந்தப்படத்தின் இசையமைப்பாளர் தனுஜ் மேனன் இயக்குனர் பிரகாஷின் 27 வருட நண்பர். அவரது குறும்படங்கள் அனைத்திற்கும் இசையமைத்துள்ள இவர், ஏற்கனவே சினிமாவில் நுழைந்து சஞ்சீவன் என்கிறபடத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள மெய்யேந்திரன், இதற்குமுன்கேடி என்ற கருப்புதுரை, சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் இந்தி ரீமேக்கிலும் தற்போது பணியாற்றி முடித்துள்ளார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை சிபு நீல் பி.ஆர்மேற்கொண்டுள்ளார்.

விஜய் டிவி புகழ் மணிசந்திரா ஒரு முக்கியமான பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.. இந்தப்படத்திற்காக பலஅரங்குகள் அமைக்கப்பட்டு சென்னையிலேயே கிட்டத்தட்ட 50 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்புநடைபெற்றது.   

இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், அருண்ராஜா காமராஜ், /பெ ரணசிங்கம் இயக்குநர் விருமாண்டி, அடங்காதே மற்றும் டீசல் படங்களின் இயக்குநர் சண்முகம், ‘விலங்குவெப்சீரீஸ்இயக்குநர் பிரசாந்த் மற்றும் ட்விட்டர் இணையதளத்தில் நடிகர் நகுல், இயக்குநர் பொன்ராம் ஆகியோர் வெளியிடுகின்றனர்.