ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல்வரிடம் முறையீடு

நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தயாரிப்பாளர் 2D ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன்
உள்ளிட்டோர் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலக்த்தில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021க்கு எதிராக முறையிட்டனர்.  திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, மாநில அரசு இதில் தலையிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரினர்.