சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘சினிமா டுடே’ எனும் பெயரில் உள்ள சினிமாஆர்வலர்களின் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்களுக்கு ஊடகம், சினிமா மற்றும் அதன் ஒலி , ஒளிபரப்புகளுக்கு தேவையான கேமிரா முதல் லேட்டஸ்ட் டிஜிட்டல் சாதனங்களின் கண்காட்சி மற்றும்விற்பனையை வெற்றிகரமாக நடத்தி வருவது நாம் அறிந்ததே.
அந்த பிரமாண்ட விற்பனை கண்காட்சி., இந்த ஆண்டும் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 21 ஆம்தேதி வெள்ளி முதல் 23 ஆம் தேதி ஞாயிறு வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 69- ஆண்டு பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புத்தகம் விற்பனை மையம்அமைக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை சினிமா தொடர்பான புத்தகங்கள், திரையுலக பிரபலங்கள்எழுதிய கவிதை மற்றும் சிறுகதை புத்தகங்கள், பிரபல சினிமா பத்திரிகையாளர்கள் சினிமா பற்றியும், திரையுலக பிரபலங்கள் பற்றியும் எழுதிய புத்தகங்கள், திரையுலக தொழில்நுட்ப கலைஞர்கள் எழுதியதிரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள், திரைப்பட வியாபாரம் சார்ந்த புத்தகங்கள் … எனசினிமாத்துறையின் அனைத்து தகவல்களையும் கொண்ட பல புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு நடை பெறுவது டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சி என்றாலும், புத்தக வாசிப்பைஊக்குவிக்கும் விதமாகவும், சினிமா சம்மந்தமான பல அறிய தகவல்களைக் கொண்ட புத்தகங்களை சினிமாவிரும்பிகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ இந்த புத்தக விற்பனைமையத்தை திட்டமிட்டு அமைத்துள்ளது.
பிரபல திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சீனு ராமசாமி , கண்காட்சியின் முதல் நாளான ஜூலை 21 ஆம் தேதி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சினிமா டுடே கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சினிமாபத்திரிகையாளர் சங்கத்தின் புத்தக விற்பனை மையத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், பிரபல நடிகரும், நடிப்பு பயிற்சி ஆசிரியருமான ‘மெட்ராஸ்‘ ஜெயராவ் சினிமா பத்திரிகையாளர்சங்கத்தின் புத்தக விற்பனை மையத்தை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்ததோடு, இயக்குநர் சீனு ராமசாமியின்கவிதை தொகுப்பான ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ என்ற புத்தகத்தை சீனு ராமசாமியின்ஆட்டோகிராஃபுடன் வாங்கி சென்றார்.
சினிமா பத்திரிகையாளர்களின் முயற்சியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த இயக்குநர் சீனு ராமசாமி, “நான்எழுத்துலக ஊடகத்தின் மூலம் வளர்ந்தவன் என்பதால் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்‘ தின் இந்த முயற்சியைஊக்குவிக்க இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டேன். உலகமே டிஜிட்டலுக்கு மாறினாலும் புத்தக வாசிப்புஎன்பது எப்போதும் நம் மனதுக்கு நெருக்கமானது . அது ,எந்த நிலையிலும் மாறாது. இளையதலைமுறையினருக்கு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், சினிமா தொடர்பான பல தகவல்களைகொண்ட புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ள ‘சினிமாபத்திரிகையாளர் சங்கத்‘தின் இந்த முயற்சியை பாராட்டி வரவேற்கிறேன். இந்த புத்தக விற்பனை மையத்தில்சினிமா பற்றிய பல தகவல்கள் கொண்ட ஏராளமான புத்தகங்கள் இருக்கிறது. திரைப்படத்துறையைசார்ந்தவர்களுக்கு இந்த புத்தகங்கள் மிக அவசியமானதாக இருக்கும், குறிப்பாக உதவி இயக்குநர்கள்இதுபோன்ற புத்தகங்களை படித்தால், அவர்களுக்கு சினிமா என்றால் என்ன? என்பது எளிதில் புரிந்துவிடும்.” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமியை தொடர்ந்து, 2ம் நாளான சனிக்கிழமை அன்று தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்களசங்கத்தலைவர் – நடிகர் – தயாரிப்பாளர்– கல்வியாளர் என பன்முகங்கொண்ட கே.ராஜன் , தேசிய விருதுபடத்தொகுப்பாளரும் இயக்குனருமான பி.லெனின் மற்றும் 65 க்கும் மேற்பட்ட கன்னடம், மலையாளம்படங்களில் பல்வேறு கேரக்டர்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவில் விரைவில் வெளிவர இருக்கும் ‘லாக்டவுன்டைரி‘ படத்தில் கதாநாயகராக அறிமுகமாக உள்ள விஹான் அமித் ஜாலி உள்ளிட்ட பிரபலங்கள் , நம் ‘சினிமாபத்திரிகையாளர் சங்கத்‘ தின் புத்தக மையத்தை பார்வையிட்டு சினிமா சம்மந்தமான புத்தகங்களை வாங்கிசென்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர் ! இன்னும் இன்று, ஜூலை 23ம் தேதி – ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்மட்டுமே நடை பெற இருக்கும் இந்த கண்காட்சியின் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்‘தின் புத்தகமையத்திற்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தர இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது சமயம் , இச்செய்தியை படிக்கும் சென்னை மற்றும் சென்னை புறநகரில் உள்ள சினிமா ஆர்வலர்கள்அனைவரும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்‘தின் புத்தக விற்பனை மையத்திற்கு வருகை தந்து சினிமாசம்மந்தமான நூல்களை 10% கழிவுடன் வாங்கி சென்று பயன் அடையுமாறு கேட்டு கொள்கிறோம்.