சிட்டி லைட்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “2கே லவ. ஸ்டோரி”. கிரியேடிவ் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் காணொளிக் காட்சியின் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது: மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ் ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம், அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு என் நன்றி.*******
என்னை வாழ்த்த எனக்காக வந்த எழில் சார், அருள் தாஸ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பிரேமலு ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… இது எங்கள் முதல் படம். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். மகிழ்ச்சி. சுசி சார் அவரில்லாமல் இந்தப்படம் இல்லை, மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துள்ளார். இமான் சார் படத்தை முழுதாக தாங்கியிருக்கிறார். நண்பன் ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
நடிகர் அருள்தாஸ் பேசியதாவது… தம்பி சுசி தான் இந்த மேடைக்கு வரக்காரணம். நான் நடிகனானது நான் மகான் அல்ல படத்தில் தான். என் பொருளாதாரம் உயர்ந்து, இந்த நிலைக்கு நல்ல நடிகனாக வரக் காரணம் சுசி தான். அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு தந்து, என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது, நான் நன்றாக இருக்கக் காரணம் சுசிதான். சுசி எப்போது கூப்பிட்டாலும், எத்தனை சின்ன பாத்திரம் என்றாலும் நான் போய் விடுவேன். சுசிக்கு தொழில் சுத்தமாகத் தெரியும், அவர் மிகத் திறமைசாலி, அதனால் தான் அவனால் இத்தனை சீக்கிரம் படத்தை முடிக்க முடிகிறது. இந்தப்படத்தில் எனக்குத் தெரிந்த பலர் நடித்துள்ளனர். எனக்குத் தெரியாத பல புதுமுகங்களும் நடித்துள்ளனர். அனைவருக்கும் இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். இந்த மேடை மிக அன்பாக ஆதரவாக இருக்கிறது. ஆனால் சமீபத்தில் “பாட்டில் ராதா” பட மேடையில் மிஷ்கின் பேசியது மிக ஆபாசமாக இருந்தது. அதைப் பார்த்து மிக வருத்தமாக இருந்தது. தமிழ்த் திரைத்துறை உலகம் முழுக்க மதிக்கக் கூடியது. அதை ஆபாசமாக்கக் கூடாது. அவரை பல மேடைகளில் பார்த்து வருகிறேன். தமிழ் ஆளுமைகள் நிறைந்த மேடையில், மிக அநாகரிகமாகப் பேசியது மிக வருத்தமாக இருந்தது. இயக்குநர் பாலாவை, ஐயா இளையராஜா அவர்களை வாடா போடா என்கிறார். யார் இவர் எல்லோரையும் வாடா, போடா எனப் பேச? மிஷ்கின் மேடை நாகரீகம் அறிந்து பேச வேண்டும். இந்த மேடை போல் அன்பாகவும் நாகரீகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
தொழில் நுட்ப குழு இயக்கம் – சுசீந்திரன் ஒளிப்பதிவு -V.S.ஆனந்த கிருஷ்ணன் இசை – டி.இமான் பாடல் வரிகள். – கார்த்திக் நேதா எடிட்டர் – தியாகு கலை – சுரேஷ் பழனிவேலு நடனம் – ஷோபி, பால்ராஜ் பி.ஆர்.ஓ – சதீஷ் (AIM) ஆடை வடிவமைப்பாளர் – மீரா போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக் தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன் தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்