“2கே.லவ் ஸ்டோரி”பிப்.14ல் வெளியீடு

சிட்டி லைட்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக,  உருவாகியுள்ள திரைப்படம்   “2கே.லவ்ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டது.  புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிகழ்வில் இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது:  வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது, இந்தப்படத்தை என் நெருங்கிய நண்பர்கள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன்  பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி.********

இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி. புதுமுகமாக அறிமுகமாகும் ஜெகவீருக்கு வாழ்த்துக்கள், துஷ்யந்த் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள், மீனாக்ஷிக்கு வாழ்த்துக்கள், அனைத்து நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் விக்னேஷுக்கு நன்றி, இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி. 

தொழில் நுட்ப குழு  இயக்கம் – சுசீந்திரன் ஒளிப்பதிவு  -V.S.ஆனந்த கிருஷ்ணன்  இசை – டி.இம்மான் பாடல் வரிகள்.    – கார்த்திக் நேதா  எடிட்டர் – தியாகு  கலை – சுரேஷ் பழனிவேலு  நடனம் – ஷோபி, பால்ராஜ் புரோ – சதீஷ் (AIM) ஆடை வடிவமைப்பாளர் – மீரா போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக்  தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன்  தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்