வாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கு ஊனம் ஒரு தடை இல்லை என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பிர்த்தவி ஆதித்தியா. ஓட்டப்பந்தைய சங்கத்தின் தலைவர் நாசரின் மகனை 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோற்கடித்து ஆதி தங்கப் பதக்கம் வெல்கிறார். அதன் பிறகு ஆதியும் அவரது தந்தை பிரகாஷ் ராஜும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் பிரகாஷ் இறந்து விடுகிறார். பலத்த காயத்துடன் ஆதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த விபத்தை பயன்படுத்தி நாசர் தனது மகனை தோற்கடித்த ஆதி இனிமேல் ஓட்டப் பந்தையத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக டாக்டருக்கு பணம் கொடுத்து ஒரு காலை வெட்டி எடுக்கச் சொல்கிறார். டாக்டரும். பணத்தாசை பிடித்து காலை வெட்டி ஆதியை ஊனமாக்கி விடுகிறார். விபத்தில் தந்தை இறந்த கவலை, தான் ஊனமாகியது இவற்றால் ஆதி தனது மனைவி அகான்ஷா சிங்குடன் 6 வருடங்களாக பேசாமல் இருக்கிறார் ஆதி. இந்த நிலையில்தான் ஆதிக்கு முனிஷ்காந்தின் மூலமாக, கிரிஷா குரூப் தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வரை ஓடியவரை, தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்தவர் என்பதற்காக நாசர் கிருஷா குரூப்பை போட்டியிலிருந்து விலக்கியது தெரியவருகிறது. அந்த இளம். பெண்னுக்கு பயிற்சி கொடுத்து இண்டர் நேஷ்னல் போட்டியில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கிரிஷா குரூப்புக்கு பயிற்சி கொடுக்க பயிற்சியாளர்களிடம் அழைத்துச் செல்கிறார் ஆதி. பயிற்சியாளர்கள் நாசருக்குப் பயந்து பயிற்ச்சியளிக்க மறுக்குகிறார்கள். கிருஷா குரூப் பயிற்சி பெற்று இண்டர்நேஷ்னல் தடகள போட்டியில் வெற்றி பெற்றாரா என்பததை சொல்கிறது மீதிக்கதை.
ஊனமுற்றவராக நடிக்கும் ஆதி மிக அற்புதமாக நடித்திருக்கிறார். சோகத்தையும் ஏக்கத்தையும் முகத்தில் படரவிட்டிருக்கும் விதம் பாராட்டுக்குறியது. உச்சக்கட்ட காட்சியில்தான் ஆதியின் சிரிப்பை காணமுடிகிறது. படமுழுக்க சோகத்தின் நிழலை ஆதியின் முககத்தில் படரவிட்டிருக்க வேண்டாம். வில்லத்தனத்தின் மொத்த உருவத்தை நாசரிடம் காணமுடிகிறது. அலட்டிக் கொள்ளாமல் எதார்த்தமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் நாசருக்கு இனி வில்லன் வேடம்தான் கிடைக்குமென்றாலும் ஆச்சரியமில்லை. ஓட்டப்பந்தைய வீராங்கனையாக நடித்திருக்கும் கிருஷா குரூப் கடுமையாக உழைத்திருக்கிறார். திரைவானில் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு கிடைக்குமென்பதை எதிர்பார்க்கலாம். முனிஷ்காந்தின் கையும் வாய்யும் தான் நடித்திருக்கிறது. கதையின் ஓட்டம் பார்வையாளர்களை அசையவிடாமல் உட்கார வைத்து விடுகிறது.
இலட்சியதை அடைய ஊனம் ஒரு தடை இல்லை என்பதை திரையில் காட்டிய இயக்குநர் பாராட்டுக்குறியவர். படமுடிவில் ரசிகர்கள் கிளாப் அடிப்பார்கள்.