பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா வேடத்தில் நடித்த கதாநாயகி சாயாசிங்

கிளாப்பின் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த படம் அல்லிராணி . இந்தப் படத்தை விஷ்ணு ராமகிருஷ்ணா இயக்கி இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு கதாநாயகியாக நடித்து வந்த சாயாசிங் இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விலை மாதுவாக இருக்கும் சாயா சிங்குக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு முதுகுத்தண்டில் ஒரு வியாதி இருக்கிறது. அதை குணப்படுத்த ரூபாய் 40 லட்சம் செலவாகும் என்றும் அக்குழந்தையின் தந்தையின் முதுகுத் தண்டிலிருந்து சிறிதளவு திசுக்களை எடுத்து அதன் மூலம் வியாதியை குணப்படுத்தலாம் என்றும் டாக்டர் கூறுகிறார். விலை மாதுவாக இருக்கும் சாயாசிங், தன்னுடைய குழந்தை யாருடைய கருவில் உருவானது என்பதை கண்டுபிடித்தாரா? சிகிச்சைக்கு செலவாகும் ரூ. 40 லட்சத்திற்கு என்ன செய்தார்? என்பதுதான் கதை. அமைதியான நடிப்பில் சாயாசிங் மிளிர்கிறார். அசால்ட்டான நடிப்பில் தம்பி ராமைய்யாவின் அனுபவம் உச்சம் பெறுகிறது.*******