யதார்த்த வாழ்வை படம் பிடித்த டூடி

கனெக்டிங் டாட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக்மதுசூதன் இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் “டூடி”.  18 வயதில் திருமணத்துக்கு நிச்சயக்கப்பட்டிருந்த ஸ்ரீதா சிவதாஸ் தனது 23 ஆம் வயதில் பெங்களூர் வருகிறார். அங்கு 33 வயதாகியிருக்கும் கார்த்திக் மதுசூதனனை தோழியின் திருமணத்தின் சந்திப்பில் காதலிக்கிறார். காதலிலும் திருமணத்திலும் நம்பிக்கை இல்லாத மதுசூதனனை காதலிக்கும் ஶ்ரீதா, நிச்சயக்கப்பட்டிருந்தவரை திருமணம் செய்தாரா அல்லது காதலித்தவரை திருமணம் செய்தாரா என்பதுதான் கதை. கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான நடைமுறை வாழ்க்கையை படம் சித்தரிக்கிறது. *********

கதாநாயகன் கார்த்திக்மதுசூதனின் குரல் வசீகரிக்கிறது.  கதாநாயகி ஶ்ரீதா சிவதாஸ் அமைதியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். கிதார் இசையும் குளிர்ச்சியான ஒளிப்பதிவும் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தளிக்கிறது.