T16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர்எஸ்.ஹரிகிருஷ்ணன் (த.கா.26191) மற்றும் ஊர்க்காவல் படைகாவலர் கே.அஸ்வின்குமார் (HG 5037) ஆகியோர் 03.7.2021 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார்03..00 மணியளவில் (04.7.2021) நசரத்பேட்டை சிக்னல் அருகில்சந்தேகத்திற்கிடமாக 2 பல்சர் இருசக்கர வாகனங்களில் சென்ற 3 நபர்களை நிறுத்தியபோது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றனர். உடனே, காவலர்கள் இருவரும், பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்தமற்றொரு நபரை மடக்கிப்பிடித்து, அவர் இடுப்பில் மறைத்துவைத்திருந்த ஸ்குரூ டிரைவர் மற்றும் கட்டிங் பிளேயரைஎடுத்தபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு, காவலர்களை தள்ளிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அவ்வழியேமற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த T-16 நசரத்பேட்டைகாவல் நிலைய காவலர் வி.எம்.ஏகாம்பரம் (கா.51419) என்பவரும்காவலர்களுடன் சேர்ந்து தப்ப முயன்ற நபரை மடக்கிப்பிடித்துவிசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் விஜய்,வ/24, த/பெ.லோகநாதன், ரெட்டிதோப்பு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம் என்பதும், விஜய்தப்பிச் சென்ற அவரது 2 நண்பர்களுடன் ஒரே பல்சர் இருசக்கரவாகனத்தில் சென்னைக்கு வந்ததும், நள்ளிரவு பூந்தமல்லியில்நோட்டமிட்டு, பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள ஒருவீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மற்றொரு பல்சர் இருசக்கரவாகனத்தை திருடிக் கொண்டு, விஜய் அவரது இருசக்கரவாகனத்திலும், நண்பர்கள் இருவரம் திருடிய இருசக்கரவாகனத்திலும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில்நசரத்பேட்டையில் விஜய் பிடிபட்டதும் தெரியவந்தது. உடனே, தலைமைக் காவலர் ஹரிகிருஷ்ணன், இரவு ரோந்துபணியிலிருந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.கோவிந்தராஜன்அவர்களுக்கு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு 2 நபர்கள்செல்வதாக தகவல் கொடுத்ததின்பேரில், காவல் ஆய்வாளர்திரு.கோவிந்தராஜன், தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றுகண்காணித்தபோது, 2 நபர்கள் மாம்பாக்கம், Saint Gobainநிறுவனம் அருகில் திருடிச் சென்ற பல்சர் இருசக்கர வாகனத்தைபோட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், மற்றொரு பல்சர் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இருசக்கர வாகனம் பூந்தமல்லி பகுதியில்திருடப்பட்டதால், பிடிபட்ட குற்றவாளி விஜய், பறிமுதல்செய்யப்பட்ட 2 பல்சர் இருசக்கர வாகனங்கள், ஸ்குரூ டிரைவர்மற்றும் கட்டிங் பிளேயருடன் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். அதன்பேரில் T-12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின்னர் எதிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
2. அமைந்தகரை பகுதியில் வீட்டிலுள்ள சிலிண்டரில் பற்றியதீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக்காவலர் சென்னை, அமைந்தகரை, எம்.எம்.காலனி, எண்.28 என்ற முகவரியில் வசிக்கும் நாராயணன் என்பவரின் மகள்கடந்த 03.7.2021 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில், வீட்டின் வெளியே வாசலில் மண்ணெண்ணெய் அடுப்பைபற்ற வைத்தபோது, வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டரில்வாயு கசிந்து இருந்ததால், அடுப்பிலிருந்த தீ வீட்டிற்குள்பரவி வீட்டினுள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரியஆரம்பித்தது. உடனே, நாராயணன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், K-3 அமைந்தகரை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்புதலைமைக் காவலர் சரவணன் (த.கா.42734) சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று, வீட்டில் பார்த்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டரும் தீபிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே தலைமைக் காவலர்சரவணன், ஒரு துணியை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் மீது மூடி சிலிண்டரில்பற்றிய தீயை அணைத்து, சிலிண்டரை வீட்டிற்கு வெளியேகொண்டு வந்து போட்டார். இதனால் பெரும் அசம்பாவிதம்நிகழாமல் தடுக்கப்பட்டது. இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு இருசக்கரவாகனத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த T-16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர்ஹரிகிருஷ்ணன், காவலர் ஏகாம்பரம், ஊர்க்காவல் படைகாவலர் அஸ்வின்குமார் மற்றும் K-3 அமைந்தகரை காவல் நிலைய தலைமைக் காவலர் ஆகியோரை சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்துபாராட்டி வெகுமதி வழங்கினார்.