சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், விபத்துகளைக் குறைப்பதற்கும் கூட்டு முயற்சியில், அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து பல்வேறு திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது. மருத்துவமனை வளாகத்திலும் சாலைகளிலும் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. GCTP விபத்தில்லா நாளின் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்8வது நாளாக மருத்துவமனைகளை மையப்படுத்திநிகழ்ச்சியினை நடத்தியது. விபத்தில் பாதிக்கப்பட்டவரை மீட்பதில் மருத்துவமனைகள் முக்கியப் பங்காற்றுகின்றன, விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு வரும்போது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சரியான சிகிச்சை அளிப்பது போன்ற செயல்முறைகளை உள்ளடக்கியதாகும்.
13.08.2024 அன்று அப்பல்லோ மருத்துவமனைவளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல் துணைஆணையாளர் திரு.V.பாஸ்கரன், போக்குவரத்து கிழக்குஅவர்கள் வரவேற்புரையாற்றினார், அதைத் தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர்.வெங்கடாசலம் சாலைப் பாதுகாப்பின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்து உரை நிகழ்த்தினர். பின்னர் ஐந்து நிமிட வீடியோ பதிவு கொண்ட ZAD விழிப்புணர்வு குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது. திரு.நவீன், CEO, உரையாற்றும் போது, பிரச்சாரத்தின் முக்கியத்துவம் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து சென்னை பெருநகரபோக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு.R.சுதாகர், இ.கா.ப, அவர்கள் ZAD ஃபிளையரையும்வெளியிட்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏழு ஓட்டுநர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுக்குபோக்குவரத்து கூடுதல் ஆணையளார் அவர்கள் விருதுவழங்கி கௌரவித்து பரிசுகள் வழங்கினார். இறுதியாக, வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் திரு. பிரசென்ஜித் கோஷ் நன்றியுரை ஆற்றி, நிகழ்வை வெற்றிகரமாக்கிய பங்கேற்பாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ZAD (Zero Accident Day) வின் ஒரு முயற்சியாக விபத்தில்லாநாளாக மாற்ற அனைவரையும் அழைக்கிறது “சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர்விபத்தில்லா தினத்தின் முயற்சியானது பாதுகாப்பாகவாகனம் ஓட்டுங்கள் பாதுகாப்பாக வந்து சேருங்கள்என்பதாகும்”