சென்னை தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண் இ.கா.ப உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்குதிரு.டாக்டர்.கண்ணன், இ.கா.ப மேற்பார்வையில் தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு மறைக்காணி பதிவு கருவிகள், கண்காணிப்பு மையம் மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் பொருட்கள் வாங்க அதிகம் கூடும் தியாகராயநகர் மற்றும் பாண்டி பஜார் ஆகிய இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள், காவல் உதவி மையம், தற்காலிக காவல் உதவி கட்டுப்பாட்டு அறை, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், 05-Body Worn கேமராக்கள், 02-டிரோன் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் நடப்பு நிகழ்வுகளைகண்காணித்து குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்குபாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய இரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலைகளில் ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொது மக்களின் குழந்தைகளுக்கு அவர்களது பெயர் மற்றும் பெற்றோரின் கைபேசி எண் கொண்ட கைமணிக்கட்டில் கட்டும்படியான வார் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவலின் கீழ் இயங்கும் டிரோன் போலிஸ் யுனிட் மூலமாக அதி உயரத்தில் நவீன கேமராக்கள் உடன் பறக்கும் டிரோன்கள் வாயிலாக பொதுமக்கள், வயதானவர்கள், குழந்தைககள் மற்றும் சந்தேக நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது